ADDED : அக் 31, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மஜித்ரோடு முத்துமுனியாண்டி 65, ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அரசு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிப்ரவரியில் ஆஞ்சியோ பரிசோதனை செய்தார். சில மாதங்களாக துாங்காமல் இருந்தார்.  நேற்று டூவீலரில் வெளியே சென்றார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே சுடுகாட்டு பகுதியில் மரத்தின் அடியில் டூவீலர் நிறுத்தப்பட்ட நிலையில் மரத்தின் கிளையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

