/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வங்கிகளில் உரிமம் கோராத டெபாசிட் ரூ.40 கோடி இருப்பு முகாம் நடத்தி ஒப்படைக்க உத்தரவு

ADDED : அக் 31, 2025 01:40 AM
சிவகங்கை:  சிவகங்கை மாவட்ட அளவில் வங்கிகளில் உரிமம் கோரப்படாத டெபாசிட் ரூ.40 கோடி வரை இருப்பதால் சிறப்பு முகாம் நடத்தி உரியவரிடம் ஒப்படைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இம்மாவட்ட அளவில் தேசிய வங்கிகளின் கீழ் 280 க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்படுகின்றன. இந்த வங்கி கிளைகளில் 10 ஆண்டுக்கும் மேலாக டெபாசிட் செய்து உரிமம் கோரப்படாமல் ரூ.40 கோடிக்கு மேல் இருப்பு உள்ளது.
குறிப்பாக வங்கிகளில் டெபாசிட் செய்து முதிர்வு காலம் முடிந்தும், அந்த பணத்தை எடுக்காமல் இருப்பது, காப்பீடு செய்து முதிர்வடைந்த பின்னும் அத்தொகை எடுக்காமல் இருப்பது, பங்கு முதலீடுகளாக வங்கியில் செலுத்தி முதிர்வு அடைந்த பின்னரும் அத்தொகையை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதை வங்கி அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இந்த வகையில் உரிமம் கோரப்படாத ரூ.40 கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம் நடத்திட வேண்டும் என வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் ரூ.40 கோடி வரை உரிமை கோராத தொகை குறித்த விபரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இத்தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்க வங்கி கிளைகள் தோறும் 'உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற சிறப்பு முகாம் நடத்தி, உரிமை கோரி வருவோரிடம் உரிய ஆவணங்களை பெற்று திரும்ப செலுத்த வேண்டும்.
இம்முகாம்களை டிச., 31 வரை அந்தந்த வங்கி கிளைகளில் நடத்திட வேண்டும். www.udgam.rbi.org.in/unclaimed-deposits/#login'' என்ற இணையதளம் மூலம் கூடுதல் விபரங்களை டெபாசிட் செய்தோர் அறிந்து கொள்ளலாம் என்றார்.