/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிக்கு சுகாதார வளாகம் கட்டிய முன்னாள் மாணவர்கள்
/
அரசு பள்ளிக்கு சுகாதார வளாகம் கட்டிய முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு சுகாதார வளாகம் கட்டிய முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு சுகாதார வளாகம் கட்டிய முன்னாள் மாணவர்கள்
ADDED : நவ 26, 2024 05:19 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்துஉள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
1998ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் தற்போது 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தங்களது சொந்த செலவில் இடைக்காட்டூர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களின் வசதிக்காக சுகாதார வளாகம் கட்டியுள்ளனர்.
நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற இறை வணக்க கூட்டத்தின் போது கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கார்த்திகேயனிடம் சுகாதார வளாகத்திற்கான சாவியை ஒப்படைத்தனர்.
சுகாதார வளாகத்தை பள்ளி மாணவிகள் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கு சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்த முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இடைக்காட்டூர் கிராம மக்கள் பாராட்டினர்.