/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலையுடன் துவக்கம்
/
கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலையுடன் துவக்கம்
கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலையுடன் துவக்கம்
கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலையுடன் துவக்கம்
ADDED : பிப் 19, 2024 05:55 AM

திருப்புத்தூர் : திருப்புத்தூர் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிேஷகம் நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இங்குள்ள கோட்டை கருப்பர் கோயிலில், விநாயகர்,பாலமுருகன், கோட்டை, சங்கிலி கருப்பர், காளி, ராக்காச்சி, பேச்சி அம்மன் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு திருப்பணி முடிந்து, பிப்.21 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் எஜமானர் சங்கல்பம், அனுக்ஞை, கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு வாஸ்துசாந்தியும், மாலை 4:00 மணிக்கு கலசங்கள் யாகசாலையில் பிரதிஷ்டையும் நடந்தது. இரவு 7:10 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்கின.
இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு 2 ம் கால யாக பூஜை, மாலை 4:00 மணிக்கு 3 ம் கால யாகபூஜை நடைபெறும். பிப்.20ல் காலை 8:00 மணிக்கு 4 ம் கால யாகபூஜை, மாலை 5:30 மணிக்கு 5 ம் கால யாகபூஜையும் நடைபெறும். பிப்.21 காலை 6:00 மணிக்கு 6ம் கால யாக பூஜையுடன் துவங்கி பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெறும்.
கலசங்கள் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:00 மணிக்குள் விமான, மூலவர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தப்படும். கோயில் அறங்காவலர் எஸ்.வயிரவன் தலைமையில் திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

