ADDED : மார் 20, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:திருப்புவனம் அருகே மடப்புரத்தில் குறி சொல்லும் கோடாங்கி சந்தனம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தனகோடாங்கி 45. மடப்புரம் கோயிலுக்கு செல்லும் வழியில் கோடாங்கி அடித்து குறி சொல்லி வந்தார்.
நேற்று மாலை ஆறு மணிக்கு இவரை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் வெட்டி விட்டு தப்பினர். தகவலறிந்து வந்த திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்புவனம் போலீசார் மடப்புரம் மதுரைவீரன் மகன் தினேஷ்குமாரை 27 , கைது செய்தனர். தினேஷ்குமாரின் உறவுக்கார பெண்ணுடன் சந்தன கோடாங்கி தொடர்பில் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.