/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 , 2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 , 2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 , 2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 , 2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : அக் 10, 2024 05:24 AM

சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்விற்கு வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இன்று (அக்.,10) இலவச பயிற்சி அளிக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த மையம் மூலம் ஆண்டிற்கு 500 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று செல்லும் மாணவர்கள் அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நுாலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இத்துறையின் www.tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2,327 காலிபணியிடங்களுக்கென டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் மூலம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கான முதல் நிலை தேர்வு செப்., 14 ல் நடந்தது. முதன்மை தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி இன்று (அக்.,10) மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.