ADDED : ஆக 17, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: காரைக்குடி பர்மா காலனியில் இந்தியன் வங்கி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இந்தியன் வங்கி காரைக்குடி மண்டல மேலாளர் அருண்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆலோசகர் மெய்யப்பன் முன்னிலை வகித்தார்.
இதில், 500க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.