/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : பிப் 14, 2025 07:17 AM
காரைக்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சாக்கோட்டை வட்டார வள மையத்தின் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடி சின்னையா அம்பலம் நகராட்சி பள்ளியில் பிப். 15 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது.
இதில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, காப்பீட்டு அட்டை, ஆதார் பதிவு நல வாரியம், பஸ் பாஸ், உதவித்தொகை, உபகரணங்கள், பராமரிப்புத் தொகை, கல்வி உதவித்தொகை, இலவச அறுவை சிகிச்சை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வழி செய்யப்படும் என சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ள ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், அடையாள அட்டை நகல், மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டுவர வேண்டும்.