ADDED : ஜன 03, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசுக்கல்லுாரியில் இந்தியன் ரெட்கிராஸ் நிறுவனம், மாநில இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
முகாமிற்கு கல்லுாரி முதல்வர் பி.ஆனந்தி தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க மூத்த உறுப்பினர் பூவாலை முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்டத் தலைவர் சுந்தரராமன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சமீனா,பேராசிரியர்கள் வித்யா,ராகவன், முரளிதரன், முத்துராமன், செல்வராஜ் பங்கேற்றனர்.

