/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேய்ச்சல் நிலமாக மாறிய காரைக்குடி மினி ஸ்டேடியம்
/
மேய்ச்சல் நிலமாக மாறிய காரைக்குடி மினி ஸ்டேடியம்
மேய்ச்சல் நிலமாக மாறிய காரைக்குடி மினி ஸ்டேடியம்
மேய்ச்சல் நிலமாக மாறிய காரைக்குடி மினி ஸ்டேடியம்
ADDED : ஜன 03, 2026 06:28 AM

காரைக்குடி: காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர்களுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மினி ஸ்டேடியம் பராமரிப்பின்றி கால்நடைகள் மேயும் நிலமாக மாறி வருகிறது.
காரைக்குடியில் உள்ள என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 9 ஏக்கரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டு 2024 ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கோ கோ, கபடி மைதானங்கள் பார்வையாளர் அமரும் கேலரி, பொருட்கள் வைப்பறை, அலுவலக அறை உட்பட பல்வேறு வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட்டது.
இந்த நவீன மினி ஸ்டேடியம் பராமரிப்பின்றி கிடக்கிறது. மைதானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிப்பதோடு, ஆடுகள் மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.
துணை முதல்வர் உதயநிதி காரைக்குடி பகுதிக்கு வரும்போது மட்டும் அதிகாரிகள் பராமரிப்பு செய்து காட்சிப்படுத்துகின்றனர்.
மற்ற நாட்களில் எவ்வித பராமரிப்பும் செய்வதில்லை. இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட மினி ஸ்டேடியம் முறையான பராமரிப்பின்றி பாழாகி வருவதாக விளையாட்டு ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

