தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இலவச தையல் இயந்திரம் விண்ணப்பம் வரவேற்பு

 இலவச தையல் இயந்திரம் விண்ணப்பம் வரவேற்பு

 இலவச தையல் இயந்திரம் விண்ணப்பம் வரவேற்பு


ADDED : டிச 12, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் மனைவி, கைம்பெண், திருமணம் ஆகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க வயது 40 க்குள் இருத்தல் வேண்டும். முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருப்பது அவசியம். படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கேட்டும் பயனாளியின் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்று, சான்று வைத்திருக்க வேண்டும். முன்னாள் படைவீரர் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு மட்டுமே தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும். இலவச தையல் இயந்திரம் பெற டிச., 15 க்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us