/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரியக்குடியில் நாளை நலம் காக்கும் முகாம்
/
அரியக்குடியில் நாளை நலம் காக்கும் முகாம்
ADDED : டிச 12, 2025 05:37 AM
சிவகங்கை: அரியக்குடியில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் டிச.,13 அன்று நடைபெற உள்ளது.
அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உட்பட்ட பரிசோதனை இலவசமாக வழங்கப்படும். இது தவிர கண், காது மூக்கு தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலம், சர்க்கரை, நுரையீரல், பொது மருத்துவம், இருதயம், குழந்தைகள் மருத்துவம் உட்பட 17 விதமான சிகிச்சை அளிக்கப்படும்.
டாக்டர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கு எக்கோ, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்படும். கர்ப்பபை, மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும்.
முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை பெற வி.ஏ.ஓ., விடம் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் இருப்பதற்கான சான்றுடன் வரவேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

