/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் இலவச பயிற்சி வகுப்பு
/
பிள்ளையார்பட்டியில் இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மே 05, 2025 07:12 AM
திருப்புத்தூர் பிள்ளையார்பட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் தொழில் முனைவோருக்கு இலவச தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன்படி மே 13 ல் பினாயில், சோப் ஆயில், சோப் பவுடர் தயாரித்தல், மே 15 ல் மாடி தோட்டம் அமைத்தல், மே 17 ல் சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு, மே 23ல் ஆடு வளர்ப்பு, மே 26 ல் முருங்கை இலை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல், மே 31ல் தென்னை பராமரிப்பு, சாகுபடி பயிற்சி வழங்கப்படும்.
மே 20 மற்றும் 21ல் மெழுகுவர்த்தி, சாம்பிராணி, பூஜை பொருள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் பயிற்சி, மே 27 மற்றும் 28 ல் ஊறுகாய், தொக்கு தயாரித்தல், பதப்படுத்துதல் பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 94885 75716ல் தொடர்பு கொள்ளவும்.