/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் தவிப்பு

ADDED : டிச 25, 2025 05:36 AM
மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு செய்வதால், வியாபாரம்பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இதன் அருகில் ஏராளமான திருமண மண்டபங்கள், தியேட்டர் , லாட்ஜ், மரக்கடைகள், ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், சார்நிலைக் கருவூலம்,டி.எஸ்.பி.,அலுவலகம் மற்றும் வழிவிடு முருகன் கோயில், பெட்ரோல் பங்க் என பல்வேறு வகையான வணிக நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பயணிகளும் திருடர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.