/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உரிய பராமரிப்பின்றி அரசு அலுவலக கட்டங்கள் வீணாகுது... தேவகோட்டையில் உயிர் அச்சத்தில் ஊழியர்கள்
/
உரிய பராமரிப்பின்றி அரசு அலுவலக கட்டங்கள் வீணாகுது... தேவகோட்டையில் உயிர் அச்சத்தில் ஊழியர்கள்
உரிய பராமரிப்பின்றி அரசு அலுவலக கட்டங்கள் வீணாகுது... தேவகோட்டையில் உயிர் அச்சத்தில் ஊழியர்கள்
உரிய பராமரிப்பின்றி அரசு அலுவலக கட்டங்கள் வீணாகுது... தேவகோட்டையில் உயிர் அச்சத்தில் ஊழியர்கள்
ADDED : டிச 25, 2025 05:38 AM

தேவகோட்டை,தேவகோட்டை பகுதியில் உரிய பராமரிப்பின்றி அரசு அலுவலக கட்டடங்கள் உள்ளதால், அவை சிதிலமடைந்து ஊழியர்களுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேவகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தேவகோட்டை, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் ஏராளமான அரசு அலுவலக கட்டடங்கள் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால், காலப்போக்கில் சிதிலமடைந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி பகுதியில் ஒரு சில கட்டடங்கள் தவிர்த்து, மற்ற கட்டடங்கள் செயல்படுகிறது. கிராமங்களில் அரசு கட்டடங்கள் 80 சதவீதம் வரை வீணாகி வருகிறது. கிராமங்களில் உள்ள மண்புழு உரக்கூடம், குப்பை பிரிப்பு மையங்கள் முழுவதும் பயனின்றி வீணாக கிடக்கிறது. ஊராட்சிகள் தோறும் கிராமங்கில் உள்ள தகவல் மையம் கட்டியும் உபகரணங்கள் இன்றி வீணாக கிடக்கிறது. இந்தநிலையில் கிராம சேவை மையத்திற்காக புதிய கட்டடங்கள் கட்டி வருகின்றனர். சமுதாய கூடங்கள் கட்டி காலப்போக்கில் அவை சிமிண்ட் பாதுகாப்பும் குடோன்களாக மாறி வருகின்றன. தேவகோட்டை அருகே காரை கிராமத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது. அதில் ஒன்று மட்டுமே கோடவுனாக செயல்படுகிறது. மற்ற கட்டடங்கள் காட்சிபொருளாக உள்ளன. செய்யானேந்தல் சமுதாயக்கூடம் பாழடைந்து கிடக்கிறது. பேராட்டுகோட்டையில் கண்மாய்க்குள் கட்டிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், நீர் சூழ்ந்தே கிடக்கிறது. கண்ணங்குடியில் வட்டார கல்வி அலுவலக பழைய பள்ளிகட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டடமே பழுதடைந்துள்ளது. இதுபோன்று பல்வேறு துறைகளுக்கு சொந்த கட்டடங்கள் இன்றி தவித்து கொண்டிருக்கும் நிலையில், பல கட்டடங்கள் கட்டியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளன. பெரும்பாலான அரசு அலுவலக கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
//

