/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்வீல் கழன்ற அரசு விரைவு பஸ் : பயணிகள் தப்பினர்
/
முன்வீல் கழன்ற அரசு விரைவு பஸ் : பயணிகள் தப்பினர்
முன்வீல் கழன்ற அரசு விரைவு பஸ் : பயணிகள் தப்பினர்
முன்வீல் கழன்ற அரசு விரைவு பஸ் : பயணிகள் தப்பினர்
ADDED : மார் 20, 2025 02:33 AM

திருப்புத்துார்:திருச்செந்துாரிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு விரைவு பஸ் நேற்று மதியம் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்தது. இங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை ரோட்டில் ஜெயமங்கலம் விலக்கு அருகில் சென்றபோது பஸ்சின் முன்பக்க கப் உடைந்தது. டிரைவரின் கீழ் உள்ள முன் சக்கரம் கழன்று ஓடி அருகிலிருந்து கண்மாயினுள் விழுந்தது.
பஸ்சில் பயணித்த 25 பயணிகள் பயந்து அலறினர். 50 மீட்டர் துாரம் ஓடிய நிலையில், டிரைவர் ஜஸ்டின் ஆர்தர்54, பஸ்சை ஒரு வழியாக நிறுத்தினார். பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் சென்றனர். இதே பஸ் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீப்பிடித்தது/ தொலைதுாரம் செல்லும் பஸ்களை கூட சரிவர பராமரிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.