UPDATED : நவ 25, 2026 03:40 PM
ADDED : நவ 25, 2026 03:40 PM

மானாமதுரை: சபரிமலை சீசன், கார்த்திகை பிறப்பு உள்ளிட்ட விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் மானாமதுரையில் தேங்காய், வாழைப்பழம் மற்றும் பூஜைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம்
துவங்கியது, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவார வழிபாடு மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு
நடத்துவது, வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது என ஆன்மிக நிகழ்வு அதிகரித்துள்ளன. இதனால் தேங்காய், வாழைப்பழம், பூ, மாலை உள்ளிட்ட பூஜைக்குத்
தேவையான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தேங்காய் தற்போது ரூ.35 , ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ரூ.40 என உயர்ந்துள்ளது. வாழைப்பழங்களின் விலையும் பழத்தின் அளவை
பொறுத்து ஒன்று ரூ.5லிருந்து ரூ.7 வரை
அதிகரித்துள்ளது.
பூஜைக்குத் தேவையான பூக்கள், மாலை உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
