/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் சீத்தாப்பழம் விளைச்சல்
/
பிரான்மலையில் சீத்தாப்பழம் விளைச்சல்
ADDED : அக் 21, 2024 05:07 AM

பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் சீத்தாப்பழம் அமோகமாக விளைந்துள்ள நிலையில் குரங்குகளுக்காக அதன் ஏலத்தை வனத்துறையினர் ரத்து செய்துள்ளனர்.
மாவட்டத்தில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியான பிரான்மலையில் ஏராளமான சீத்தாப்பழ மரங்கள் வளர்ந்துள்ளன. பிரான்மலை, ஒடுவன்பட்டி, மேலவண்ணாரிருப்பு, செல்லியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இப்பழங்கள் கொத்துகளாய் காய்த்தும், பழுத்தும் தொங்குகின்றன.
வழக்கமாக இம்மலையில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் காய்க்கும் சீத்தாப்பழங்களை வனத்துறையினர் ஏலம் விடுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக மலையில் திரியும் குரங்குகளுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக குரங்குகளின் இரைக்காக சீத்தாப்பழம் ஏலம் விடுவதை வனத்துறையினர் ரத்து செய்துள்ளனர். இந்தபழங்களை குரங்குகள் சாப்பிட்டு, பயன் அடைந்துவருகின்றன.

