/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு நிவாரணம் வழங்காததால் விரக்தி
/
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு நிவாரணம் வழங்காததால் விரக்தி
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு நிவாரணம் வழங்காததால் விரக்தி
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு நிவாரணம் வழங்காததால் விரக்தி
ADDED : மே 15, 2025 05:02 AM
இளையான்குடி: இளையான்குடியில் அதிகளவில் குண்டு மிளகாய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் 2500 எக்டேருக்கும் மேல் குண்டு மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியை ஒட்டி உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.,மங்கலம் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குண்டு மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய்க்கு இயற்கையிலேயே அதிக காரத்தன்மை உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் இளையான்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் மிளகாய் செடிகள் அழுகியதால் விவசாயிகள் நஷ்டத்திற்குள்ளாகினர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது வரை நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி குண்டு மிளகாய் விவசாயிகள் கூறியதாவது: இளையான்குடியில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையால் அனைத்து பகுதிகளிலும் மிளகாய் செடிகள் அழுகி சேதமாகின. வங்கிகளிலும் தனி நபர்களிடமும் கடன் வாங்கி மிளகாய் விவசாயம் செய்து நஷ்டத்திற்குள்ளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இளையான்குடி பகுதியில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகத்திடமும்,வேளாண்மை துறை அதிகாரிகளிடமும் நிவாரணம் வழங்குவது குறித்து கேட்டால் இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கைவிரிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு இளையான்குடி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றனர்.