/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
‛'முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி'
/
‛'முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி'
ADDED : செப் 28, 2024 05:40 AM
சிவகங்கை : அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்.2ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் 'முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி' என தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (2022--2027) கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் பணி 2024 ஜூலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் மூலம் விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை விரைவில் மாற்றிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில்,'முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி' என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் எஸ்.நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார்.