/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழா
/
சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழா
ADDED : அக் 02, 2025 11:37 PM

சிவகங்கை ; சிவகங்கை, திருப்புத்துாரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிவகங்கையில் கலெக்டர் பொற்கொடி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். கிராமதான நிர்மாண சங்க பொது செயலாளர் உறுமத்தான் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தாசில்தார் மல்லிகா அர்ஜூனா உட்பட சர்வ கட்சியினர், காந்திய அமைப்பினர் பங்கேற்றனர். திட்ட இயக்குனர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
* திருப்புத்துார்: காந்தி சிலைக்கு காங்., நகர் தலைவர் சீனிவாசன் தலைமையில், மாவட்ட துணை தலைவர் கணேசன், நகர் செயலாளர் செல்வம், பொருளாளர் அண்ணாமலை, துணை தலைவர் வெள்ளை கண்ணு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
* சிங்கம்புணரியில் காந்தி திருஉருவ படத்திற்கு காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமையில் பல்வேறு அமைப்பு, கட்சியினர் மாலை அணிவித்தனர். சிங்கை தருமன், வேம்பு நாகப்பன், உதயகுமார் பங்கேற்றனர். ஏற்பாட்டை நாகராஜன் தலைமையில் காந்தி நகர் மக்கள் செய்திருந்தனர்.