/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாராகிறது; சதுர்த்தியை யொட்டி விற்பனை ஜோர்
/
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாராகிறது; சதுர்த்தியை யொட்டி விற்பனை ஜோர்
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாராகிறது; சதுர்த்தியை யொட்டி விற்பனை ஜோர்
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாராகிறது; சதுர்த்தியை யொட்டி விற்பனை ஜோர்
UPDATED : ஆக 07, 2025 08:49 AM
ADDED : ஆக 07, 2025 07:02 AM

மானாமதுரை : மானாமதுரையில் வருடந்தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயார் செய்து தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளிலும்,பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய களிமண்ணால் ஆன சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் மானாமதுரையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கும் போது எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும் இங்கு விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மானாமதுரை மண்பாண்ட தொழிலாளி மாற்றுத்திறனாளி பாண்டியராஜன்: எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மண்பாண்ட தொழிலாளர்கள். சிறு வயது முதலே படிப்போடு சேர்த்து மண்பாண்ட தொழிலையும் கற்றேன். ஒரு கை இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு மண்பாண்ட தொழிலை செய்ய வேண்டும் என நம்பிக்கை இருந்ததாலும்.எனது குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தாலும் வருடம் தோறும் விநாயகர் சிலைகளை மிகவும் பயபக்தியோடு தயார் செய்து அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகிறேன். அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர், என்றார்.