/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் அணிவகுத்த விநாயகர் சிலைகள்
/
சிங்கம்புணரியில் அணிவகுத்த விநாயகர் சிலைகள்
ADDED : ஆக 30, 2025 03:56 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் சிங்கம்புணரி பகுதியில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி ஹிந்து சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் கிராமப்பிரமுகர் சத்தியசீலன் தலைமையில் நடந்தது.
செல்வம், சேவுகப்பெருமாள், இயற்கை விவசாயிகள் சத்தியசீலன், அருண் முன்னிலை வகித்தனர். பா.ஜ.., முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார்.
ஜெயந்தன் ஆண்டார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எருதுகட்டு திடல் ஐயப்பன் கோயிலில் இருந்து இரவு 9:10 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சேவுகப்பெருமாள் கோயிலை அடைந்தது.
அங்குள்ள தெப்பத்தில் அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டது.
விழாவில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் குகன், பாலசுப்பிரமணியன், கோசேவா பொறுப்பாளர் தினேஷ், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.