/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய்களை உடைத்து கற்களை திருடும் கும்பல்
/
கால்வாய்களை உடைத்து கற்களை திருடும் கும்பல்
ADDED : ஜூன் 28, 2025 11:37 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் பாசன கால்வாய்களை உடைத்து குண்டு கற்களை கும்பல் திருடுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாலாறு, பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பாசன கால்வாய்கள் உள்ளன. 25 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கால்வாய்கள் அனைத்தும் கற்களால் கட்டப்பட்டது.
சில ஆண்டுகளாக சிலர் கால்வாய்களை பல இடங்களில் உடைத்து கற்களை வாகனங்களில் திருடிச் செல்கின்றனர்.
இதனால் தண்ணீர் கால்வாயில் இருந்து வெளியேறி வீணாகி வருகிறது. பாசன காலத்தில் முழுமையான தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.