/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் மடைகளில் குவியும் குப்பை தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
கண்மாய் மடைகளில் குவியும் குப்பை தண்ணீர் செல்வதில் சிக்கல்
கண்மாய் மடைகளில் குவியும் குப்பை தண்ணீர் செல்வதில் சிக்கல்
கண்மாய் மடைகளில் குவியும் குப்பை தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : டிச 19, 2024 04:59 AM

திருப்பாச்சேத்தி: திருப்புவனம் வட்டார கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் மடைகளில் குடிமகன்கள் பலரும் போதையில் கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்வதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் மழை காரணமாகவும், வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாகவும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு கண்மாய்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மூன்று முதல் 10 மடைகள் வரை உள்ளன.
திருப்பாச்சேத்தி கண்மாய் உட்பட பல கண்மாய்களில் பொதுப்பணித்துறை சார்பில் மடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் வட்டாரத்தில் இதுவரை ஏழாயிரத்து 414 ஏக்கரில் நெல் நடவு பணி நடந்துள்ளன.
கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளதால் மேலும் பல விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயலில் உழவு பணி, வரப்பு வெட்டுதல், நாற்றங்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தண்ணீர் தேவை . கண்மாய்களில் இருந்து மடைகள் மூலம் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப தண்ணீரை திறந்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் மடைகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மடை சிமென்ட் தளத்தின் மீது அமர்ந்து மது அருந்துவதுடன் மது பாட்டில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், குப்பை என அனைத்தையும் மடையினுள் வீசி சென்று விடுகின்றனர்.
மடைகளின் உள்ளே போய் பிளாஸ்டிக் பாட்டில் அடைத்து கொண்டு தண்ணீரை வெளியேற விடாமல் தடுக்கின்றன. இவற்றை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டு வருகிறது. விவசாய இடங்களில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.