/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் குப்பை அகற்றம்
/
திருக்கோஷ்டியூரில் குப்பை அகற்றம்
ADDED : பிப் 29, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர், - திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப விழாவை யொட்டி பக்தர்களால் சேர்ந்த குப்பை அகற்றும் பணி நிறைவடைந்தது.
இவ்விழாவில் பக்தர்கள் திரளாகக் கூடி தெப்பத்தை தரிசித்தனர். விழா முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டனர். நெரிசலால் குப்பையை முழுமையாக அகற்ற முடியவில்லை. தெப்பக்குளம், திருக்கோஷ்டியூர் பகுதியில் சேர்ந்த குப்பை தேவஸ்தானத்தின் சார்பில், 11 பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மூலம் கடந்த 3 நாட்களாக அகற்றும் பணி நடந்தது.
தற்போது குப்பை அகற்றப்பட்டு திருக்கோஷ்டியூர்,தெப்பக்குளம் பகுதி 'பளீச்' என காட்சியளிக்கிறது.

