/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முல்லை பெரியாறு கால்வாயில் குப்பை
/
முல்லை பெரியாறு கால்வாயில் குப்பை
ADDED : பிப் 20, 2024 11:38 PM

சிவகங்கை- சிவகங்கை அருகே ரோஸ் நகர் பகுதியில் செல்லக்கூடிய முல்லை பெரியாறு கால்வாயில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான ரோஸ் நகர் பகுதியில் சாத்தரசன்கோட்டை, அதப்படக்கி பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்காக கட்டப்பட்ட முல்லை பெரியாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முழுவதும் குப்பை நிறைந்து காணப்படுகிறது.
இந்த பகுதியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி, அரசு மாணவர்கள் விடுதி, மாவட்ட அரசு மருந்து குடோன், கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஆயுதப்படை பயிற்சி நிலையம் உள்ளிட்டவை செயல்படுகிறது. இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்தக்கூடிய குப்பைகளை கொட்டுவதற்கு தெருக்களில் குப்பை தொட்டி கிடையாது. ஆகையால் பல இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி இங்குள்ள தெருக்களில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

