ADDED : பிப் 13, 2024 06:52 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பெரியாறு கால்வாயில் பிளாஸ்டிக், உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இவ்வொன்றியத்தில் வேட்டையன்பட்டி, சிங்கம்புணரி பேரூராட்சி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் செல்கிறது.
சமீப காலமாக இப்பகுதி திருமண மண்டபங்களில் சேரும் உணவு, இறைச்சி கழிவுகளை பாலிதீன் பைகளில் அடைத்து இக்கால்வாய்களில் வீசி செல்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் செயல்படும் மதுபான பார்களில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளையும் இக்கால்வாயில் கொட்டுகின்றனர். துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் சேரும் குப்பைகளை கால்வாய்களில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.