UPDATED : நவ 22, 2026 05:40 PM
ADDED : நவ 22, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே குப்பை தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
திருப்புவனத்தில் தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் இயங்குகின்றன.
தினசரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் அலுவலகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வதே கிடையாது. இதனால் அலுவலகம் முழுவதும் குப்பை நிரம்பி காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு நிலவி வருகிறது.
