/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் கரையில் தேங்கும் குப்பை
/
திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் கரையில் தேங்கும் குப்பை
திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் கரையில் தேங்கும் குப்பை
திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் கரையில் தேங்கும் குப்பை
ADDED : பிப் 23, 2024 05:19 AM

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் தெப்பக்குளக்கரையில் பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்றாததால் சுகாதாரக்கேடாக உள்ளது.
திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உத்ஸவம் பிப்.15ல் துவங்கியது.கடந்த சில நாட்களாக வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. தெப்பக்குளக்கரையில் மண்டபத்திற்கு முன்பாக பலரும் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இப்பகுதியில் நடை பாதை கடைகளில் பாலிதீன் பைகளில் விளக்குகள் வைத்து விற்கின்றனர். பக்தர்கள் குளக்கரையில் விளக்கேற்றி செல்கையில் பாலிதீன் உள்ளிட்டவற்றை விட்டுச் செல்கின்றனர். இதனால் குளக்கரைப்பகுதி தற்போதே குப்பை சேர்ந்து பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கடந்த தெப்ப உத்ஸவத்தின் போதும் குப்பையை விரைவாக அகற்றாமல், அன்னதானத்தட்டுக்கள்,குடிநீர் பாட்டில்கள் பரவலாக காணப்பட்டன. இதனைச் சுட்டி காட்டிய கோட்டாட்சியர், 'முன்னேற்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் குப்பை சேகரமாகாமல் உடனுக்குடன் அகற்ற, தூய்மைப்பணியாளர்களை தயார்படுத்த' அறிவுறுத்தினார். ஆனால் விழா துவங்கிய நிலையில் குப்பை சேர த்துவங்கி விட்டன. இதனால் மாவட்ட நிர்வாகம் தெப்ப உத்ஸவத்திற்கான தூய்மைப்பணிக்கான விரிவான குழுவை ஏற்படுத்த உத்தரவிட வேண்டியது அவசியமாகும்.