/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் செய்தி எதிரொலி வைகையில் குப்பை அகற்றம்
/
தினமலர் செய்தி எதிரொலி வைகையில் குப்பை அகற்றம்
ADDED : ஜன 08, 2025 06:36 AM

மானாமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பையை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை வைகை ஆறு பூர்த்தி செய்து வருகிறது. வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை வைகை ஆற்றுக்குள் ஆங்காங்கே குப்பையை கொட்டுவதால் வைகை மாசடைந்து வருகிறது.
தினமலர் நாளிதழில் செய்தியாக வெளியானதை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வைகை ஆற்று பகுதிக்குள் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றினர்.
வைகை ஆற்றங்கரையோரம் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் ஆற்றுக்குள் குப்பையை கொட்டக்கூடாது என்றும் நகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.