/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் குப்பைக்கு தீ வைப்பு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் சேதம்

ADDED : அக் 02, 2025 03:59 AM

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்க்கு அடியில் குப்பை கொட்டி தீ வைப்பதால் குழாய் சேதமடைகின்றன.
மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், வடகரை, கழுங்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினசரி சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து அழிக்காமல் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதுதவிர வடகரையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளிலும் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக புதிய ராட்சத குழாய் பொருத்தப்பட்டுள்ளது. பாலத்தின் மேற்பகுதியில் ராட்சத குழாய் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு கீழே குப்பைகளை கொட்டி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தீ வைத்து விடுகின்றனர். பாலத்தின் மேற்பகுதியில் குழாய் வளைந்து செல்வதால் தீ வைக்கும் போது இணைப்பு சேதமடையும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தீ வைப்பதால் பாலம் இடிந்து சேதமடைந்து விட்டது. தற்போது புதிதாக பொருத்தப்பட்ட குழாயும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.