/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாசனக் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
/
பாசனக் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
ADDED : அக் 02, 2025 03:57 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் நகரினுள் செல்லும் பாசனக்கால்வாயில் தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரி யுள்ளனர்.
திருப்புத்துார் பெரிய கண்மாயிலிருந்து தென்மாப்பட்டுக் கண்மாய்க்கு தாம்போகியிலிருந்து நீர்வரத்துக் கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் சிங்கம்புணரி ரோடு, மதுரை ரோடு, சிவகங்கை ரோடுகளை கடந்து தென்மாப்பட்டு கண்மாய் செல்கிறது. மேலும் நகரினுள் குடியிருப்புகளின் வழியாக செல்வதால் தடுப்புச்சுவர் இன்றி பாசனக் கால்வாய் சரிந்து விடுகிறது. மேலும் கழிவுநீர் இறங்கி புதர் பெருகி தேங்கி நிற்கிறது.
கால்வாயில் புதுத்தெரு பகுதியில் சில பகுதிகளில் மட்டும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இக்கால்வாயில் குடியிருப்பு மற்றும் ரோடு பகுதிகளிலும் முழுமையாக தடுப்புச்சுவர் கட்டி பாதுகாக்கவும், தூர் வாரி கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும், பொதுமக்கள் கோரியுள்ளனர்.