/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயோ மெட்ரிக் பதிவு செய்யாவிடில் காஸ் சிலிண்டர் சப்ளை கிடையாது
/
பயோ மெட்ரிக் பதிவு செய்யாவிடில் காஸ் சிலிண்டர் சப்ளை கிடையாது
பயோ மெட்ரிக் பதிவு செய்யாவிடில் காஸ் சிலிண்டர் சப்ளை கிடையாது
பயோ மெட்ரிக் பதிவு செய்யாவிடில் காஸ் சிலிண்டர் சப்ளை கிடையாது
ADDED : நவ 15, 2024 02:32 AM
திருப்புவனம்:பயோ மெட்ரிக்கில் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு நவ.,30 முதல் காஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. உஜ்வாலா திட்டம் தவிர மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.36 முதல் ரூ.47 வரை மானியம் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 80 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் இறந்த நபர்கள் இணைப்பு வரை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால் மானிய நிதி முறைகேடாக செல்கிறது. இதனை தவிர்க்க சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதார் கார்டு, சிலிண்டர் புத்தகம், போட்டோ உள்ளிட்டவற்றுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இதையடுத்து கடந்த மே மாதம் முதல் வாடிக்கையாளர்களை ஏஜன்சி நிறுவனத்தினர் வரவழைத்து பதிவு செய்து வருகின்றனர். இன்னமும் 25 சதவிகிதம் பேர் வரை பயோமெட்ரிக் (கேஒய்சி) பதிவு செய்வதில் அலட்சியம் காட்டுகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் இம்மாத இறுதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களையும் பயோ மெட்ரிக்கில் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது. அப்படி பதிவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு நவ., 30 முதல் காஸ் சிலிண்டர் விநியோகிப்பதை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ள வேண்டும்.