/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
/
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
ADDED : ஜூலை 10, 2025 02:48 AM

சிவகங்கை: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து உட்பட 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மத்திய, மாநில அரசு ஊழியர்களில் 4,300 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் அறிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனங்களான தபால் துறை, எல்.ஐ.சி., மாநில அரசு நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இம்மாவட்டத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களில், நேற்றைய ஸ்டிரைக்கில் 4,300 பேர் பங்கேற்றனர். குறிப்பாக காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 கிளைகளின் கீழ் 600 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 2,700 கண்டக்டர், டிரைவர்கள் பணிபுரிகின்றனர். அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், பெரும்பாலான அரசு பஸ்கள் நேற்று ஓடவில்லை. போதிய பஸ்களின்றி பயணிகள், பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார் எல்.ஐ.சி., கிளைகள் முன் எல்.ஐ.சி., ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது வேலை நிறுத்தம் காரணமாக அங்கன்வாடி, பள்ளி சத்துணவு மையங்களில் மாணவர்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்க ஊழியர்களின்றி தவிப்பிற்கு உள்ளாகினர். அரசு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படாததால் ஆசிரியர், அரசு ஊழியர், மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.