/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகம் தாராளம்: தீபாவளிக்கு தடையின்றி பெற கடை திறப்பு
/
ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகம் தாராளம்: தீபாவளிக்கு தடையின்றி பெற கடை திறப்பு
ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகம் தாராளம்: தீபாவளிக்கு தடையின்றி பெற கடை திறப்பு
ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகம் தாராளம்: தீபாவளிக்கு தடையின்றி பெற கடை திறப்பு
ADDED : அக் 21, 2024 05:06 AM
சிவகங்கை, அக்.21- -மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரேஷனில் தாராளமாக பருப்பு, பாமாயில் வினியோகம் செய்ய, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட அளவில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 837 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகள் மூலம் 4.80 லட்சம் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பலகாரம் தயாரிக்க ஏதுவாக, தடையின்றி கார்டுதாரர்களுக்கு தாராளமாக துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அந்த வகையில் கார்டுதாரர்களுக்கு வழங்க 4 லட்சத்து 8 ஆயிரத்து 337 கிலோ துவரம் பருப்பு, 3 லட்சத்து 87 ஆயிரத்து 184 கிலோ பாமாயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்., 19 வரை மாவட்ட அளவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்து 63 கிலோ துவரம் பருப்பு, 2 லட்சத்து 30 ஆயிரத்து 480 கிலோ பாமாயில் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டு மொத்தமாக கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் 61 சதவீத பொருட்களை கடைகளுக்கு வழங்கிவிட்டது. அதே நேரம் அனைத்து ரேஷன்கடைகளில் நடத்திய ஆய்வில், பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு இன்னும் பாமாயில், துவரம் பருப்பு வினியோகம் செய்யாமல், கடையிலேயே இருப்பு இருப்பதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இன்று (அக்.,21) முதல் தீபாவளி பண்டிகை வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு தாராளமாக பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்யும் பொருட்டு, விடுப்பு எடுக்காமல் பணி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். * தாராள ஒதுக்கீடு: சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது: அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தடையின்றி பருப்பு, பாமாயில் பாக்கெட்களை வினியோகம் செய்துவிட்டோம். தீபாவளிக்கு தடையின்றி இவற்றை கார்டுதாரர்கள் பெறலாம், என்றார். * தடையின்றி பொருள் கிடைக்கும்: சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் கூறியதாவது: தீபாவளிக்குள் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் வினியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், என்றார்.
///ரேஷன்கடை திறப்பு நேரம்: பாக்ஸ் மேட்டர்: அனைத்து ரேஷன் கடைகளும் தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி, மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வெள்ளி, 3, 4 ம் ஞாயிறன்று மட்டுமே ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. பெரும்பாலான ரேஷன் கடைகள் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே திறந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ///