sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பது கேள்விக்குறி! பள்ளிகளில் காலிப்பணியிடம் அதிகரிப்பு

/

மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பது கேள்விக்குறி! பள்ளிகளில் காலிப்பணியிடம் அதிகரிப்பு

மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பது கேள்விக்குறி! பள்ளிகளில் காலிப்பணியிடம் அதிகரிப்பு

மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பது கேள்விக்குறி! பள்ளிகளில் காலிப்பணியிடம் அதிகரிப்பு


ADDED : ஜூன் 11, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய, விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். பள்ளிகளில் அரசு வழங்கும் காலை, மதியம் வழங்கும்சத்துணவை சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.

சத்துணவு மையங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி வாங்கி வருதல், அவற்றை முறையாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவீடு செய்து, சமையலரிடம் வழங்குவது, அமைப்பாளர், உதவியாளர்களின் பணி, அவற்றை முறையாக சமைத்து மாணவர்களுக்கு தினமும் மதியம் சத்துணவுடன் முட்டை, வாழைப்பழம், பாசி பயறு, கொண்டக்கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவது சமையலர்களின் பணியாக உள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள 1293 பள்ளி சத்துணவு மையங்களுக்கும் தலா ஒரு அமைப்பாளர், உதவியாளர், சமையலர் என சத்துணவு மையங்களில் 3879 பேர் பணிபுரிய வேண்டும்.

கடந்த சில ஆண்டாக இம்மாவட்ட நிர்வாகம் சத்துணவு மையங்களில் ஏற்படும் காலிபணியிடங்களை அறிவித்து ஆண்டுதோறும் நேர்முக தேர்வு மூலம் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவை அனைத்தும் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே நடக்க வேண்டும்.

ஆனால், இம்மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டிற்கு பின் காலியாக உள்ள மையங்களுக்கு தேவையான அமைப்பாளர், உதவியாளர், சமையலர் பணியிடங்களை நிரப்பாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதன் காரணமாக அமைப்பாளர் 836, சமையலர் 393, உதவியாளர் 973 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடந்த ஆட்சியில் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் கலெக்டர்கள் நேரடியாக தகுதி வாய்ந்தவர்களுக்கு அமைப்பாளர், சமையலர்,உதவியாளர் பணியிடங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம் ஏராளமானவர்கள் பள்ளி சத்துணவு மையங்களில் பணியில் சேர்ந்தனர்.

2018ம் ஆண்டில் இருந்தே சிவகங்கை மாவட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக சத்துணவு மையங்களுக்கு சமையலர், உதவியாளர், அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். 2018ம் ஆண்டிற்கு பின் இருந்த கலெக்டர்கள் தொடர்ந்து 3 முறை நேர்முக தேர்வினை நடத்தி, ஆட்களை நியமிக்கும் போது ஆளுங்கட்சியினர் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.

இதனால் தகுதியிருந்தும்ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இம்மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

எனவே கலெக்டர் ஆஷா அஜித், ஆளுங்கட்சியினர் தலையீடு இன்றி இம்மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 2202 அமைப்பாளர், உதவியாளர், சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது:

தொடர்ந்து பல ஆண்டாக சிவகங்கை மாவட்டத்தில் காலியாகும் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், சமையலர் பணியிடங்களை நிரப்பாததால், 5 முதல் 7 சத்துணவு மையங்களை ஒரே அமைப்பாளர் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் காய்கறி வாங்கி தருதல், அரிசி, பருப்பு, எண்ணெய் பெற்றுத்தருவதில் சிரமம் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us