/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி சிறுமி பலி: உறவினர்கள் மறியல்
/
சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி சிறுமி பலி: உறவினர்கள் மறியல்
சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி சிறுமி பலி: உறவினர்கள் மறியல்
சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி சிறுமி பலி: உறவினர்கள் மறியல்
ADDED : டிச 19, 2025 04:48 AM

திருப்பாச்சேத்தி: சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி, சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் தன்ஷிகா, 5, பாண்டிமுத்து மகள் காயத்ரி, 7. இருவரும், டிச., 16ல் கட்டனுார் -திருப்பாச்சேத்தி ரோட்டில் நடந்து சென்ற போது, அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓட்டி வந்த டூ - வீலர் மோதியதில், சிறுமியர் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தன்ஷிகா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
திருப்பாச்சேத்தி போலீசார், விபத்து குறித்து சிறுவனின் தந்தை, சிறுவன் மீது வழக்கு பதிந்தனர். மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, தன்ஷிகா உறவினர்கள் நேற்று, திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே மறியலில் ஈடுபட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்தனர்.