/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தியில் பெண்கள் பள்ளி
/
திருப்பாச்சேத்தியில் பெண்கள் பள்ளி
ADDED : நவ 28, 2024 05:20 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் பெண்களுக்கு தனியாக மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் கானுார், கல்லுாரணி, ஆவரங்காடு, மாரநாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலரும் கல்விக்காக திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர். திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் பள்ளியாக உள்ளது.
இதில் 243 மாணவர்கள்,208 மாணவிகள்,29 ஆசிரியர்கள் உள்ளனர்.பெண்கள் பள்ளிக்காக மானாமதுரை அல்லது திருப்புவனம் சென்று வர வேண்டியுள்ளது. இதனால் திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதிப்பதில்லை. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு கால்நடைகளை மேய்ப்பதற்கும் விவசாய பணிகளுக்கும் அனுப்பி விடுகின்றனர்.
இதனால் மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தியில் பெண்களுக்கு தனியாக பள்ளி அமைந்தால் கூடுதல் பெண்கள் உயர் கல்வி பயில வசதியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் திருப்பாச்சேத்தியில் பெண்கள் பள்ளி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.