UPDATED : ஜூலை 27, 2026 03:20 PM
ADDED : ஜூலை 27, 2026 02:10 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை கோ -கோ கிளப் மெரிட் அகாடமி, தேசிய உரிமைகள் களம் இணைந்து போதையில்லா தமிழகம் படைப்போம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 19 வயதுக்குட்பட்டோர் மாணவ மாணவியர் பங்கேற்ற கோ.கோ போட்டிகள் நடத்தின.
தேசிய உரிமைகள் களம் நிறுவனத் தலைவர் பிரபாகரன் தலைமையில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர். ஏற்பாடுகளை மாநில மாணவர் பிரிவு செயலாளர் அறிவழகன் பாரதி மற்றும் நிர்வாகிகள், கோகோ கிளப் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
