தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குப்பைக்கு போன தொட்டிகள்

குப்பைக்கு போன தொட்டிகள்

குப்பைக்கு போன தொட்டிகள்


UPDATED : ஜூலை 27, 2026 03:20 PM

ADDED : ஜூலை 27, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 03:20 PM ADDED : ஜூலை 27, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே திடக்கழிவு மேலாண்மைக்காக வாங்கப்பட்ட ப்குப்பை தொட்டிகள் பயன்பாடு இல்லாமலேயே குப்பைக்கு போய்விட்டது.

இவ்வொன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் குப்பைகளை வாங்கி கிடங்குக்கு கொண்டுசெல்ல பேட்டரி வண்டிகள் இயக்கப்படுகிறது. வீதிகளில் குப்பைகளை போடாமல் தொட்டிகளில் போட்டு அங்கிருந்து தனது கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல சில ஊராட்சிகளுக்கு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் இவை பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது.

ஒடுவன்பட்டி ஊராட்சியில் இத்தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் ஊராட்சி அலுவலகம் அருகே பயனற்று கிடக்கிறது. நல்ல நோக்கத்திற்காக தீட்டப்படும் திட்டங்கள் சில அதிகாரிகளின் பாராமுகத்தால் வீணாகிவருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us