ADDED : ஏப் 18, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:
புனித வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் புனித வெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது.
காலை 6:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னர் வியான்னி அருட்பணி மையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
மாலை 5:00 மணிக்கு திருச்சிலுவை பாதை, மாலை 6:00 மணிக்கு மறைமாவட்ட பிஷப் தலைமையில் புனித வெள்ளி திருச்சடங்கு நடந்தன.
இரவு 7:30 மணிக்கு கலைக்குழுவினர் சார்பில் இயேசுவின் திருப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 8:30 மணிக்கு துாம்பா பவனி, சர்ச் வளாகத்தை சுற்றி நடந்தது. புனித வெள்ளி ஆராதனையில் பாதிரியார் ஜேசுராஜா, உதவி பாதிரியார் கிளிண்டன், மறைமாவட்ட செயலாளர் பிரான்சிஸ் பிரதாப் உட்பட பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.