/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: அரசு அறிவிப்பு
/
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: அரசு அறிவிப்பு
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: அரசு அறிவிப்பு
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: அரசு அறிவிப்பு
ADDED : ஆக 06, 2025 10:36 PM
சிவகங்கை:மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அரசு ரூ.25 லட்சம் வழங்க உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் 29. இவர், பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த 9.5 பவுன் நகையை திருடியதாக கூறி, மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ஆக., 20க்குள் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம், 3 சென்ட் பட்டா, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவினில் வேலை ஆகியவை அரசு தரப்பில் தரப்பட்டுள்ளது.
ஜூலை 22 ல் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அஜித்குமார் தரப்பில் வாதாடினர்.
இதற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் செய்தி எதிரொலி நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு தரப்பில் இருந்து இடைக்கால நிவாரணம் கொடுப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. இது குறித்து ஜூலை 31 தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, நீதிமன்ற உத்தரவுபடி அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க உள்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.