நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தென்மாப்பட்டில் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் விழுந்ததில் வாலிபர் பலியானார்.
வேளனிப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் முருகானந்தம், சேகர் மகன் பிரபு32 இருவரும் ஜூலை20 இரவில் டூவீலரில் திருப்புத்துாரிலிருந்து ஊருக்கு சென்றனர். இரவு தென்மாப்பட்டு பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் ரோட்டில் விழுந்தது. அதில் பிரபுவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், மீண்டும் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.