/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால் பள்ளி வேனில் மோதி விபத்து
/
அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால் பள்ளி வேனில் மோதி விபத்து
அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால் பள்ளி வேனில் மோதி விபத்து
அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால் பள்ளி வேனில் மோதி விபத்து
ADDED : ஆக 16, 2025 02:36 AM

சிவகங்கை: சிவகங்கையில் தனியார் பள்ளி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 30 மாணவிகள் காய மடைந்தனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை பள்ளி மாணவிகள், பயணிகளை ஏற்றிக்கொண்டு (வண்டி எண்: டி.என்.63-1591) காலை 11:50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது.
இந்த பஸ் சிவ கங்கையில் இருந்து கோர்ட் வாசல், இடைய மேலுார் உட்பட பல்வேறு கிராமங்களை சுற்றி வந்து, உடையநாதபுரம் சேர்கிறது அரசு பஸ்சை டிரைவர் சிவகங்கையை சேர்ந்த அய்யப்பன் 30, ஓட்டினார்.
கண்டக்டர் சிவலிங்கம் 37, பணிபுரிந்தார். இந்த பஸ்சில் நேற்று 10 பள்ளி மாணவிகள், பெற்றோர் வந்தனர். நேற்று மதியம் 12:15 மணிக்கு மதுரை முக்கு வழியாக திருப்புத்துார் ரோட்டில் சென்றது.
அப்போது பெருமாள் கோயில் தெரு சந்திப்பில் எதிரே சோழபுரத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை வந்த தனியார் பள்ளி வாகனம் சென்றது. அப்போது அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காததால், எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனால், பள்ளி வேன், பஸ்சில் இருந்த ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.