/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சென்னைக்கு அரசு பஸ் இயக்கம் சிங்கம்புணரி மக்களுக்கு பயனில்லை
/
சென்னைக்கு அரசு பஸ் இயக்கம் சிங்கம்புணரி மக்களுக்கு பயனில்லை
சென்னைக்கு அரசு பஸ் இயக்கம் சிங்கம்புணரி மக்களுக்கு பயனில்லை
சென்னைக்கு அரசு பஸ் இயக்கம் சிங்கம்புணரி மக்களுக்கு பயனில்லை
ADDED : மார் 14, 2024 03:56 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டும்பயன் தரவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நகரில் இருந்து தலைநகர் சென்னைக்கு 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அரசு பேருந்து ஒன்று கூட இயக்கப்படாமல் இருந்தது. பலமுறை வலியுறுத்திய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரசு பஸ் விடப்பட்டது.
இப்பேருந்து மதுரையில் இருந்து சிங்கம்புணரி வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்றது. இது ஓரளவுக்கு பயனுள்ளதாக இருந்த நிலையில் தற்போது இப்பேருந்து இப்பகுதி மக்களுக்கு பயன் தராமல் போய்விட்டது.
மதுரையில் இருந்து பஸ் கிளம்பும் போதே சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகளை ஏற்றி வந்து விடுகிறார்கள். இதனால் கடமைக்கு இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நுழைந்ததும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே பஸ் சென்று விடுகிறது.
இதனால் சிங்கம்புணரி மக்களுக்காக விடப்பட்ட பேருந்து அந்த பகுதி மக்களுக்கு உரிய பயனைத் தரவில்லை.
சிங்கம்புணரியிலிருந்து புறப்படும் வகையில் ஆன்லைன் பதிவு சேர்க்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றி வருகிறார்கள் எதற்காக சீக்கிரமே புறப்படுகிறார்கள் என்று பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சிங்கம்புணரியில் முன்பதிவு மையம் அமைத்து டோக்கன் முறையில் பயண சீட்டு கொடுத்தால் மட்டுமே அது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

