/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ் டயர் பஞ்சர் பயணிகள் தவிப்பு
/
அரசு பஸ் டயர் பஞ்சர் பயணிகள் தவிப்பு
ADDED : மே 01, 2025 06:19 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே அரசு பஸ் டயர் பஞ்சரானதால் பயணிகள் மாற்று பஸ் வசதி கிடைக்காமல் இரண்டு மணி நேரம் தவித்தனர்.
அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் செல்லும் அரசு பஸ் நேற்று திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரிக்கு சென்றது. மாலை 4:45 மணி அளவில் கே.வைரவன்பட்டி விலக்கை அடுத்து செல்லும் டயர் பஞ்சரானது. பஸ் பயணிகளுடன், கண்டக்டரும் இறங்கினர். டயர் மாற்ற பஸ்சை டிரைவர் எடுத்துச் சென்று விட்டார். கண்டக்டர் பயணிகளை அங்கு வந்த வேறு அரசு பஸ்களில் ஏற்றி அனுப்ப முயன்றார். ஆனால் வந்த பஸ்களில் கூட்டம் இருந்ததால் ஏற்ற முடியவில்லை. இதனால் ரோட்டிலேயே நீண்ட நேரம் பயணிகள் அதிருப்தியுடன் காத்திருந்தனர்.
இரண்டு மணி நேரமாகியும் பஸ் வராததால் பயணிகள் மறியலில் ஈடுபடத்துவங்கினர். போலீசார் அங்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பஸ் வந்ததை அடுத்து பயணிகள் பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.