/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரி செல்லாத அரசு பஸ்கள் சிவகங்கையில் நோயாளிகள் தவிப்பு
/
மருத்துவக் கல்லுாரி செல்லாத அரசு பஸ்கள் சிவகங்கையில் நோயாளிகள் தவிப்பு
மருத்துவக் கல்லுாரி செல்லாத அரசு பஸ்கள் சிவகங்கையில் நோயாளிகள் தவிப்பு
மருத்துவக் கல்லுாரி செல்லாத அரசு பஸ்கள் சிவகங்கையில் நோயாளிகள் தவிப்பு
ADDED : மே 28, 2025 11:36 PM

சிவகங்கை:சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மானாமதுரை செல்லும் அரசு டவுன் பஸ்கள் மருத்துவக் கல்லுாரிவளாகத்தின் உள்ளே செல்வதில்லை. மருத்துவமனை முன்பு ரோட்டில் மக்களை இறக்கி விடுவதால் உடல் நலக்குறைவால்சிகிச்சைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து மானாமதுரை செல்லும் அரசு டவுன் பஸ்சில் மருத்துவக் கல்லுாரிக்கு செல்லலாம்.
சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து மானாமதுரை, இடைக்காட்டூர், பெரியகோட்டை பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் மருத்துவக் கல்லுாரி வளாகம் சென்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்கிறது.
அதேபோல் மானாமதுரை பகுதியில் இருந்து சிவகங்கை வரும் டவுன் பஸ்கள் அனைத்து மருத்துவக்கல்லுாரி உள்ளே சென்று பயணிகளை இறக்கி ஏற்றி வருகின்றனர்.
ஆனால் முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட சில நாட்களில் காலை நேரத்தில் செல்லும் டவுன் பஸ்கள் பஸ்ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு மருத்துவக் கல்லுாரிக்கு உள்ளே செல்வதில்லை. பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏறாவிடாமல் பஸ் உள்ளே செல்லாது என்றும் மாற்று பஸ்சில் செல்ல கண்டக்டர்கள் கூறுகின்றனர்.
சிலர் மருத்துவக் கல்லுாரி முன்பு ரோட்டில் இறக்கி செல்கின்றனர். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 1 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மானாமதுரை, இடைக்காட்டூர், பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் மருத்துவக் கல்லுாரிக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.