/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவ கல்லுாரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் :அரசு டாக்டர்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 01, 2025 02:18 AM
சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிளில் உள்ள எமர்ஜென்சி துறைகளில் உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் எமர்ஜென்சி டிபார்ட்மெண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 36 மருத்துவ கல்லுாரிகளில் இந்த துறை இயங்கி வருகிறது. அவற்றில் 12 மருத்துவக் கல்லுாரிகளை தவிர மற்ற கல்லுாரிகளில் பட்டம் மேற்படிப்பு கோர்ஸ்களும் எமர்ஜென்சி துறையில் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய மருத்துவ ஆணையம் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு எமர்ஜென்சி துறை தேவை இல்லை என்று அறிவித்த நிலையில் இந்த மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள பல பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகளின் சிகிச்சைகளும் பாதிக்கப்படுகிறது. தகுதி உள்ள இணை மற்றும் பேராசிரியர் பதவி உயர்வு குறைகின்றது. எமர்ஜென்சி துறை காலி பணியிடங்களை வரும் பேராசிரியர் பணி மாறுதல் கவுன்சிலிங் 2025 முதல் நிரப்பப்பட வேண்டும், என சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு அரசு டாக்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.