ADDED : நவ 24, 2024 07:42 AM

தேவகோட்டை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை மாநாடு இளஞ்செழியன் தலைமையில் நடந்தது. சேவுகமூர்த்தி, பூமிநாதன், இந்திரா, அரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மெக்கேலம்மாள் மாநாட்டை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சேசுமேரி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் அப்துல்பாஷா, தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தென்றல், தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் செல்வகுமார், சங்க மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் பேசினர்.
தலைவராக இளஞ்செழியன், செயலாளராக சேவுகமூர்த்தி, பொருளாளர் பூமிநாதன், உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.